பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியலிருந்து நீக்கப்பட மாட்டார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி நீக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர் நீண்ட காலமாக அடிப்படையற்ற பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பதவி நீக்கம்
எதிர்க்கட்சிகளினால் அடிப்படையற்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஹரிணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் எனவும் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் செய்யப்படும் பிரசாரங்களில் உண்மையில்லை என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சிகள் காணும் கனவுகளை அவர்கள் நிஜமாக்க இவ்வாறான போலித் தகவல்களை சமூகத்தில் பரப்பி வருவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
