Home சினிமா லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர் ஹரிஷ் கல்யாண் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லப்பர் பந்து படத்தில் நடிக்க நடிகர் ஹரிஷ் கல்யாண் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பார்க்கிங் திரைப்படம் மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

எம்.எஸ். பாஸ்கருக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். இதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார்.

சமந்தாவை பற்றி சர்ச்சை பேச்சு.. எழுந்த கடும் கண்டங்கள்! மன்னிப்பு கேட்ட அமைச்சர்

இப்படம் முதல் நாளில் இருந்தே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதுவரை உலகளவில் ரூ. 23 கோடிக்கும் மேல் லப்பர் பந்து திரைப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம் 

இந்த நிலையில் லப்பர் பந்து திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக ரூ. 70 லட்சம் சம்பளமாக ஹரிஷ் கல்யாண் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது.  

NO COMMENTS

Exit mobile version