கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என அரசாங்கத்தின் மீது புதிய குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரே முறைப்பாடு செய்துள்ளார் என்று தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாயமான 19 ஆயிரம் புத்தகங்கள்
கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 19,892 முதலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த மே மாதம் 4ஆம் திகதி சம்பந்தப்பட்ட புத்தக இருப்பை ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்குக் கொண்டு செல்ல கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி பெற்றிருந்தபோதிலும், திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுமார் 8 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, முதலாம் வகுப்பின் மூன்றாம் பருவத்திற்கான புத்தக இருப்பு, திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO..
Source: https://tamilwin.com/article/have-eight-hundred-thousand-textbooks-missing-1786691657
