Home இலங்கை அரசியல் கஜேந்திரன் தரப்பின் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு காவல்துறையினர் இடையூறு

கஜேந்திரன் தரப்பின் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைக்கு காவல்துறையினர் இடையூறு

0

தேர்தலை புறக்கணிக்குமாறு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) அணிக்கு
புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி கஜேந்திரன் உள்ளிட்ட அணியினர் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனடிப்படையில், இன்று (12) முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சார
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரச்சார நடவடிக்கை

இந்தநிலையில், இன்று மதியம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக
நிலையங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து பிரச்சார நடவடிக்கையில்
ஈடுபட்ட போது குறித்த பகுதிக்கு வந்த புதுக்குடியிருப்பு காவல் நிலைய
பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை
இடைமறித்து அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரத்தை பெற்று அதில் உள்ள விடயங்கள்
தொடர்பில் கேட்டபோது இரண்டு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

இதையடுத்து, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள்
அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இடத்துக்கு வருகைதந்து குறித்த
துண்டுப்பிரசுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தேர்தல் செலவீனங்களை
மதிப்பிடுவதற்காக துண்டுப்பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர் கட்டாயம்
அச்சிடப்பட்ட வேண்டும் எனவும் ஆகவே அவ்வாறு அச்சக பெயருடன் கூடிய துண்டுப்
பிரசுரங்களை விநியோகிக்குமாறு கூறி அவர்கள் கைவசமிருந்த ஒருதொகை துண்டுப்
பிரசுரங்களை காவல்துறையினர் கையகப்படுத்தி பெற்றதோடு அவர்களை விடுவித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version