Home இலங்கை சமூகம் இலங்கையில் முதன் முறையாக ஆகாயக் கப்பல் போக்குவரத்துத்திட்டம் !

இலங்கையில் முதன் முறையாக ஆகாயக் கப்பல் போக்குவரத்துத்திட்டம் !

0

இலங்கையில் (Sri Lanka) முதன் முறையாக ஆகாயக் கப்பல் போக்குவரத்துத்திட்டம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் முகமாக உத்தியோகபூர்வ கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் மதனவாசன் (Madanavasan) மற்றும் ரஷ்ய (Russia) தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் குறித்த வேலைத்திட்டம் தொடர்பிலான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் உஷ்ணமான காற்றின்
மூலமாக ஆகாயத்தில் பயணிக்கக்கூடிய ஆகாயக் கப்பல் திட்டம் எதிர்வரும் ஜனவரி
மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர்
செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 16 நபர்கள் கொண்ட குழுவினர் குறித்த ஆகாயக்கப்பல் மார்க்கமாக நிலாவெளி முதல்
பாசிக்குடா மற்றும் அறுகம்பே வரை பயணிக்கக்கூடிய வகையில் குறித்த திட்டமானது
அமைந்திருக்கும் என இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன் அதனூடாக அதிக
சுற்றுலாப்பயணிகளை கிழக்கு மாகாணத்திற்கு கவரக்கூடிய செயற்பாடாக இது
அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version