ஒரு தனிநபர் அரசியலில் நுழைவதற்கு சொத்து வைத்திருப்பது ஒரு தடையல்ல என்று என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த செல்வம் அல்லது சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பதை விளக்க முடியாத காரணத்தால் பிரச்சினைகள் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கான எடுத்துக்காட்டு
ஒரு தனிநபர் சொத்து வைத்திருப்பதை தனது கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், ஒரு தனிநபர் வெளியிட முடியாத மூலங்களிலிருந்து செல்வத்தைப் பெறும்போதுதான் பிரச்சினை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் ஏற்கனவே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது நாட்டிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
