Home இலங்கை அரசியல் தலைமறைவான ராஜித நாளை வெளியே வரவுள்ளார்! வெளியான அறிவிப்பு

தலைமறைவான ராஜித நாளை வெளியே வரவுள்ளார்! வெளியான அறிவிப்பு

0

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை உத்தரவை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்க முடிவு செய்த கொழும்பு உயர் நீதிமன்றம், பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறித்தல் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) நாளையதினம் (29) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கிரிந்த மீன்வளத் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு 26.2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் ராஜித சேனாரத்ன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை நீதிமன்றில் முன்னிலையாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்த சீராய்வு மனு

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்கக் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (28) அறிவித்தல் அனுப்பியுள்ளது.

மேலும், ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிறப்பித்த பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவரது சட்டத்தரணிகள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவை கோரிய போதிலும், அந்த உத்தரவை பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதி கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் அனுப்புவதாக மட்டுமே கூறியது.

சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, வழங்கப்பட்ட அறிவிப்பின்படி நாளை நிச்சயமாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று கூறினார்.

பின்னர் குறித்த மனுவை செப்டம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version