மூதூர் (Mutur) பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார்.
குறித்த திறப்பு விழாவின் பின்னர் மக்கள் பாவனைக்காக சுகாதார நிலையம் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி. ஜி. எம். கொஸ்தா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் வீ. பிரேமானந், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
