Home இலங்கை சமூகம் யாழ். நகரில் அதிரடி பரிசோதனை : சிக்கிய வர்த்தக நிலையங்கள்

யாழ். நகரில் அதிரடி பரிசோதனை : சிக்கிய வர்த்தக நிலையங்கள்

0

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றையதினம் (24) யாழ்ப்பாண(jaffna) பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

28 உணவகங்கள் மற்றும் இதர வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக 28 வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் 11 கடைகளில் குறைபாடுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கை 

அந்த வர்த்தக ஸ்தாபனங்களில் வியாபாரத்துக்காக வைக்கப்பட்டிருந்த 9 வகையான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன. அத்துடன் நான்கு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுகாதார பரிசோதகர்கள்

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்பின் பேரில், சுகாதார வைத்திய அதிகாரி, தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி, தாய்சேய் நல வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த களத்தரிசிப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/TsiogEFetOI

NO COMMENTS

Exit mobile version