Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையர்களின் பருமன் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை

இலங்கையர்களின் பருமன் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 89 சதவீதமான மரணங்கள் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றது.

கிறிப்டோ நாணய பயன்பாட்டில் ஆபத்து: மத்திய வங்கியின் ஆளுநர் அறிவிப்பு

தொற்றாத நோய்கள்

இதில் பெரும்பாலான இலங்கையர்கள் இதய நோய் மற்றும் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 60,000 இலங்கையர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த வருடம் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தொற்றாத நோய்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். 

யால தேசிய பூங்காவில் இரு இத்தாலி நாட்டவர்கள் அதிரடி கைது

சொகுசு வாகன இறக்குமதியினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பெருந்தொகை வரிமோசடி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version