அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ ( Donald Lu) இலங்கை, இந்தியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விஜயமானது இன்றிலிருந்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்த விஜயத்தின்போது ஒவ்வொரு நாட்டுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ஆதரவை நிரூபிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார உறவுகள்
இந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக துணைச் செயலர் லூ , துணைத் தூதரகப் பணியாளர்களை சந்திக்கவுள்ளார். இதன்பின்னர் டொனால்ட் இலங்கையுடன் அமெரிக்காவின் பங்காளித்துவத்தை ஆழப்படுத்த கொழும்புக்குச் செல்லவுள்ளார்.
லூவின் சந்திப்புகளில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அமெரிக்காவின் ஆதரவையும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படையான வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து உதவிச் செயலாளர் லூ டாக்காவில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு டாக்காவில் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்து அமெரிக்க, வங்காளதேச ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.