Home சினிமா உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… யாரு பாருங்க

உடல்நலக் குறைவு காரணமாக பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… யாரு பாருங்க

0

பிக்பாஸ் 9

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி ஒளிபரப்பும் ஒரு மாஸான ஷோ தான் பிக்பாஸ்.

முதல் சீசன் மக்களுக்கு சரியான அறிமுகம் இல்லை தான் ஆனால் சில நாட்களுக்கு பிறகு நிகழ்ச்சி சூடு பிடிக்க மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்கள் ஒரே சண்டை தான்.

தமிழை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆபத்தில் இருந்த சீதாவை காப்பாற்றிய முத்து, ஷாக்கில் அருண்.. சிறகடிக்க ஆசை புரொமோ

வெளியேற்றம்

தெலுங்கு பிக்பாஸ் 9வது சீசனில் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சயமான ஆயிஷா வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்தார்.

அவர் நிகழ்ச்சிக்குள் சென்றதில் இருந்து அதிரடி சரவெடியாக விளையாடி வந்தார். ஆனால் தற்போது அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார், காரணம் அவரின் உடல்நிலை என கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version