Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறிதரன்

நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறிதரன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய(23) நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.

 அத்துடன், சிறிதரன் ஊழல் செய்ததாகவும், நலன் முரண்பாட்டுடன் செயல்பட்டதாகவும்,
தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முறைபாடுகள் மீதான விசாரணையைத் தடுக்க
முயன்றதாகவும் தசநாயக்க குற்றம் சாட்டினார்.

முறைப்பாடு 

சிறிதரன் உறுப்பினராக உள்ள அரசியலமைப்பு பேரவைக்கு, குறித்த முறைப்பாடு
தொடர்பில் தெரிவிக்க, அவர் தவறிவிட்டாதாகவும், சாமர குறிப்பிட்டார்.

அத்துடன் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள இலஞ்ச ஒழிப்பு
ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகும்.

எனவே சிறிதரன் தனது சொந்த வழக்கின் முடிவைப் பாதிக்கக்கூடிய முடிவுகளில்
ஈடுபட்டுள்ளதால், இது ஒரு நலன் முரண்பாடாக அமைகிறது என்றும் தசநாயக்க
வாதிட்டார்.

NO COMMENTS

Exit mobile version