Home இலங்கை அரசியல் சுகாதார அமைச்சுப் பதவியில் மாற்றம்

சுகாதார அமைச்சுப் பதவியில் மாற்றம்

0

சுகாதார அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உள்ளிட்ட சுகாதாரத்துறைசார் உயர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் பொறுப்பு ராஜித சேனாரட்னவிடம் வழங்கப்படும் எனவும், தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண பதவி விலகுவார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு

அத்துடன், ராஜித சேனாரட்ன இந்த மாத இறுதியில் ஜனாதிபதியுடன் நிச்சயமாக இணைந்து கொள்வார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  

தகுதி இருந்து வழிவாங்கல்களினால் சில உயர் அதிகாரிகளுக்கு பதவி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு உள்ளிட்ட சில பதவி நிலைகளில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://tamilwin.com/article/health-minister-post-will-change-1719045658

NO COMMENTS

Exit mobile version