Home இலங்கை அரசியல் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் கையெழுத்திட்ட ஆவணங்கள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் கையெழுத்திட்ட ஆவணங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 2024 ஆகஸ்ட் 29 – 30 வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில்,கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரக தகவல்படி, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம், இன்று(30) கொழும்பில் இந்தியா, மாலைதீவுகள், மொரிசியஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளால் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

2023ஆம் ஆண்டு டிசம்பரில் மொரிசியஸில் நடைபெற்ற, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் கையெழுத்திட்ட ஆவணங்கள் | Documents Signed By Indian Defense Adviser Lanka

நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பங்கை மேலும் மேம்படுத்துவதற்கான ஸ்தாபக ஆவணங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version