Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு குறிகாட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு குறிகாட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்

0

Courtesy: Sivaa Mayuri

2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் கொழும்பு மாவட்டத்திற்கான காணி மதிப்பீட்டு காட்டி, வருடாந்த அடிப்படையில் 6.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

இதன்படி, காணி மதிப்பீட்டின் அனைத்து துணை குறிகாட்டிகளான குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை என்பன முறையே 8.5 சதவீதம், 8.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் என்ற வருடாந்த அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

துணை குறிகாட்டிகள் 

அரை ஆண்டு அடிப்படையில், 2023 இன் இரண்டாம் பாதியில் பதிவுசெய்யப்பட்ட மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 2024 இன் முதல் பாதியில் காணி மதிப்பீடு மற்றும் அதன் துணை குறிகாட்டிகள் அதிக விகிதத்தில் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில் வர்த்தக மற்றும் குடியிருப்பு துணைக்காட்டிகளுடன்; ஒப்பிடுகையில் தொழில்துறை காட்டி மெதுவான வேகத்தில் அதிகரித்ததை அவதானிக்க முடிந்தது என்று இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version