Home இலங்கை குற்றம் மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்:சுற்றிவளைத்த சுகாதார அதிகாரிகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்:சுற்றிவளைத்த சுகாதார அதிகாரிகள்

0

மன்னார் நகர பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதியின்றி சுகாதார
சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நேற்று (3) சுகாதார உத்தியோகத்தர்களினால் சுற்றி
வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் -பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய
முறையில் பதிவு செய்யப்படாமல் அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், மன்னார் பொது சுகாதார வைத்திய
அதிகாரியின் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரஉத்தியோகத்தர்களினால்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது.

வழக்கு தாக்கல்

குறித்த உணவகத்தின் கழிவுநீர் வெளியேற்றப்படாமல் புழுக்கள் இளையான்
உருவாகியும் அதே நேரம் ஆரோக்கியமற்ற விதமாக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை,கையுறை தலையுறை பயன்படுத்தாமல் , அத்துடன் உணவுப்பொருட்கள்
பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அடிப்படையில் குறித்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பல்வேறு பிரிவுகளில் மன்னார் நீதவான்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version