இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் நீல் இத்தவல, வியன்னாவில்
ஊழல் தடுப்பு அமுலாக்க மறுஆய்வுக் குழு அமர்வின் ஒரு பகுதியாக, உலக வங்கி
அதிகாரிகளான லாரா போப், நேஹா மரியம் ஸைகாம் மற்றும் எமிலி வான் டெர் டோஸ் டி
வில்லெபோயிஸ் ஆகியோரைச் சந்தித்தார்.
கலந்துரையாடலில் கவனம்
இலங்கையின் புதிய குற்றச் சொத்துக்கள் சட்டத்தின் (2025 ஆம் ஆண்டின் 5ஆம்
இலக்கம்) திறம்பட அமுலாக்கம் குறித்து, இந்த கலந்துரையாடலில் கவனம்
செலுத்தப்பட்டது.
இந்த சட்டம், சட்டவிரோத சொத்துக்களைக் கண்காணித்தல், முடக்குதல், பறிமுதல்
செய்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றுக்கான அதிகாரங்களை வழங்குகிறது.
தயார் நிலையில் உலக வங்கி
இந்த நிலையில் திறன் மேம்பாடு, சொத்து கண்காணிப்பு கருவிகள் மற்றும்
இலத்திரனியல் அமைப்புகளுக்கான ஆதரவு உள்ளிட்ட தொழிநுட்ப உதவிகளை வழங்க உலக
வங்கி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
