Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் பிமல் -ஹக்கீம் இடையில் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்றில் பிமல் -ஹக்கீம் இடையில் கடும் வாக்குவாதம்

0

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) மற்றும் அவைத்தலைவர்
பிமல் ரத்நாயக்க ஆகியோர் இன்று(27) நாடாளுமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அலுவல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க உறுதியளித்த போதிலும், தாம், அலுவல் குழுவிலிருந்து விலக்கி
வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

கடும் வாக்குவாதம்

அலுவல் குழு கூட்டம் நடைபெறும் அறைக்குள் தம்மை வரவிடாமல், பிமல் ரத்நாயக்க
தடுத்ததாகவும் ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.

 இந்த குற்றச்சாட்டை மறுத்த பிமல் ரத்நாயக்க, ஹக்கீமின் அறிக்கையை
ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு கோரியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version