Home இலங்கை அரசியல் பணம் சம்பாதிப்பதற்கான அமைச்சை கோரிய ரிஷாட்: கடும் குற்றச்சாட்டு

பணம் சம்பாதிப்பதற்கான அமைச்சை கோரிய ரிஷாட்: கடும் குற்றச்சாட்டு

0

நல்ல பணம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சு ஒன்றை வழங்குமாறு சஜித் பிரேமதாசவிற்கு ரிஷாட் பதியுதீன் நிபந்தனைகளை வழங்கியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியைச் சேர்ந்த மூவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பல நிபந்தனைகளை முன்வைத்து பதியுதீன் , சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார் என இஷாக் ரஹ்மான் கூறியுள்ளார்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சுக்கள் நல்ல முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ரிஷாட்பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக இஷாக் ரஹ்மான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு  பிரவேசித்த , இஷாக்
ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகிய உறுப்பினர்களே ரணிலுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version