Home இந்தியா டெல்லியில் கனமழை : நூறுக்கு மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

டெல்லியில் கனமழை : நூறுக்கு மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு

0

இந்தியாவின் (India) – டெல்லியின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ததால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் புயல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெல்லி விமான நிலையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, நேற்றிரவு (24) ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக விமான சேவைகள் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையம்

இதேவேளை சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து சரிபார்க்குமாறு விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், டெல்லியில் மே 23 முதல் மே 25 வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version