நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்திலுள்ள பல பகுதிகள் வெள்ளப்பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன.
அத்துடன், இரணைமடு மற்றும் வவுனிக்குளம் உள்ளிட்ட நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியங்களில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானதும் இன்று (28)அதிகாலை 2.30 மணியளவில் திருகோணமலைக்கு(trincomale) வடகிழக்கு பகுதியில் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
பலத்த காற்றுடனான கனமழை
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்றுடனான கனமழை பெய்துவருகின்றது.
இதேவேளை, உரிய நீர் வடிகால் பொறிமுறைகள் பின்பற்றப்படாத யாழ். நகரம் நல்லூர் பகுதிகளை அண்டிய பகுதிகள் வெள்ளக்காடுகளாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://www.youtube.com/embed/0I3Js1yxGjU