Home முக்கியச் செய்திகள் வடக்கில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கில் இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மதியம் 2.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பல்கலை கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

மழைவீழச்சி

காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

மேலும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி: விமர்சிக்கும் டக்ளஸ்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

NO COMMENTS

Exit mobile version