Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு நிலையான நடைமுறைகளுக்கு அமைவான கட்டண அடிப்படையில் மட்டுமே, உலங்கு வானூர்திகளை வழங்கி வருவதாக இலங்கை விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக விமானப்படை வானூர்திகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை துஸ்பிரயோகம் செய்தமை குறித்து ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் சிறிலங்கா, அண்மையில் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், பல முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் விமானப்படையின் வானூர்திகளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ள விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பணம் செலுத்திய பின்னரே, அந்த சேவைகள் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.