ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்
இராமநாதன் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த பிரசார நடவடிக்கை நேற்று (17.09.2024) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்தில் தனது ஆதரவாளர்களுடன் பிரசார
நடவடிக்கையில் ஈடுபட்டார்.
துண்டுப்பிரசுர விநியோகம்
அத்துடன், சுயேட்டை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான
துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
Source: https://tamilwin.com/article/campaign-in-jaffna-to-support-ranil-wickramasinghe-1726601817
