ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன்பின் ஆண்டாள் அழகர், ஆபீஸ், தேன்மொழி பி ஏ ஆகிய சீரியல்களில் நடித்தார். இதன்பின் வெள்ளித்திரைக்கு வந்த ஜாக்குலினுக்கு முதல் படமான கோலமாவுக்கு கோகிலா நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கிய ஜாக்குலின் டாப் 6ல் இடம்பிடித்தார். பணப்பெட்டியுடன் வீட்டிற்குள் வரமுடியாமல் போன காரணத்தினால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாலகிருஷ்ணா.. அடேங்கப்பா இது வேற லெவல்
ரொமான்டிக் புகைப்படம்
பிக் பாஸ் வீட்டிற்குள் ஜாக்குலின் இருக்கப்போதே, அவருடைய காதலர் சர்ப்ரைஸ் ஆக உள்ளே வந்திருந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது காதலருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஜாக்குலின்.
இதோ அந்த புகைப்படம்..