Home முக்கியச் செய்திகள் சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவில் உதவி..!

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவில் உதவி..!

0

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு சந்நிதியான் ஆசிரமும் முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு உதவிப்பொருட்களை வழங்கி வைத்துள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்

இதன்படி முல்லைத்தீவு
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம்,
கிராமங்களில் உள்ள 63 குடும்பங்களுக்கு ரூபா
252,000 பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை(14/12/2025) வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உதவிகளை சந்நிதியான் ஆசிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி
செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

NO COMMENTS

Exit mobile version