Home முக்கியச் செய்திகள் சிறப்புரிமைகள் நீக்கம்: சொகுசு காரை மீள ஒப்படைத்த ஹேமா பிரேமதாச

சிறப்புரிமைகள் நீக்கம்: சொகுசு காரை மீள ஒப்படைத்த ஹேமா பிரேமதாச

0

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு அரசாங்கம் வழங்கியிருந்த சொகுசு கார் மீள அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை சட்டத்தின் படி, ஓய்வுபெற்ற ஜனாதிபதி இல்லாதுவிடின் அவரின் மனைவிக்கு சில சிறப்புரிமைகள் வழங்கப்படும்.

அதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்கு குறித்த கார் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

புதிய சட்டமூலம்

இந்த நிலையில், சமீபத்தில் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் நீக்கப்பட்டதையடுத்து, ஹேமா பிரேமதாச தனக்கு வழங்கப்பட்டிருந்த காரை மீள ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.   

NO COMMENTS

Exit mobile version