Home இலங்கை அரசியல் மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு பெண்கள்

0

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அம்பிகா சாமுவேல் 58,201 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பெண் பிரதிநிதித்துவம்

கடந்த 1977ஆம் ஆண்டில் முதலாவது மலையக பிரதிநிதித்துவத்தைப் பெற்ற மலையக சமூகம் கடந்த 47 வருடங்களில் பெற்ற முதலாவது பெண் பிரதிநிதித்துவம் இது என்பது முக்கிய விடயம் ஆகும்.

இது மலையக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமையை எடுத்துக் காட்டும் முகமாக அமைந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டப் பட்டியலில்  சமன்மலி குணசிங்க,
பதுளை மாவட்டத்திலிந்து நிலாந்தி கோட்டஹாச்சி, ஓஷானி உமங்கா

களுத்துறை மாவட்டத்திலிருந்து சரோஜா பால்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 சமகி ஜன பலவேகய

மாத்தறை மாவட்டத்திலிருந்தும் நிலுஷா கமகே,

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து சாகரிகா அதாவுடா

கேகாலை மாவட்டத்திலிருந்து ஹிருணி விஜேசிங்க,

புத்தளம் மாவட்டப் பட்டியலிலிருந்து சதுரி கங்கானி.

கண்டியிலிருந்து துஷாரி ஜயசிங்க,

காலி மாவட்டத்திலிருந்து ஹஸார லியனகே,

மாத்தளை மாவட்டப் பட்டியலிலிருந்து தீப்தி வாசலகே பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல, சமகி ஜன பலவேகவின் கண்டி மாவட்ட பட்டியலிலிருந்தும்,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, சமகி ஜன பலவேகவின் மாத்தளை மாவட்ட பட்டியலிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version