Home இலங்கை அரசியல் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதி

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதி

0

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதி அமல் ரணராஜா  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் ஹிருணிக்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

கடூழிய சிறைத் தண்டனை

அதற்கமைய மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் 3 இலட்சத்து 60ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்த நிலையில், அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version