வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில்
தீர்த்தத்திருவிழா நேற்று(24) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
அதிகாலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான்
வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து
நகுலேஸ்வரர் சமேதர நகுலாம்பிகை, விநாயகர் மற்றும் முருகப்பொருமான் வள்ளி
தெய்வயானையுடனும், கீரிமலை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து முத்துமாரி
அம்மனும் எழுந்தருளி கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் மாவிட்டபுரம்
கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இன்று பூங்காவனம்
இடம்பெறவுள்ளது.
