வரலாறு பாடத்தை தெரிவு பாடமாக மாற்றும் அரசாங்கத்தின் முடிவு சரியானது என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்து வெளியிட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
1600ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நல்ல வரலாறு இல்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
விருப்பப் பாடம்
அத்துடன், இலங்கை தமிழ் மக்களுக்குச் சொந்தமானதா அல்லது சிங்கள மக்களுக்குச் சொந்தமானதா என்பதை வரலாறு கற்பிக்கவில்லை என்றும் அத்தகைய பிளவுவாத கருத்துக்களை மக்களின் மனதில் பதிய வைக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் மட்டுமே படிக்க வேண்டிய விருப்பப் பாடமாக அந்தப் பாடங்கள் இருந்தால் போதுமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
