Home இலங்கை அரசியல் பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

பட்டலந்தை பின்னணியில் ரணிலின் மறைக்கப்பட்ட முகம் : அம்பலப்படுத்தும் அநுர தரப்பு

0

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் பட்லந்த வதை முகாம்
உருவாக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு (Kandasami Prabhu) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் போரதீவுபற்றுப் பிரதேச
உள்ளுராட்சி சபை தேர்தல் பரைப்புரைக் கூட்டம் நேற்று (01) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிலே புரையோடிப்
போயிருக்கின்ற அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றி இருக்கின்றோம்.

குற்றவாளிகள்
தற்போது தண்டனைகளைப் பெற்று அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் என்று ரீதியில்
நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

அரசியல் பழிவாங்கல்களைக் கடந்து சுயாதீனமாக
சரியான சட்டவாக்கத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றன.

பட்டலந்த வதைமுகம் கடந்த காலங்களில் இலங்கை அரசியல் வரலாற்றிலும் சரி, இலங்கை
வரலாற்றிலும்சரி, ஒரு கறை படிந்த ஒரு நாட்களாகத் அதனை கருத முடியும்.

பட்டலந்த வதை முகாம்

அந்த
காலப்பகுதியில் இந்த நாட்டை நிர்வகித்திருந்த ரணில் விக்ரமசிங்க
போன்றவர்களின் அனுசரணையின் ஊடாகத்தான் இந்த பட்டலந்த வதை முகாம்
உருவாக்கப்பட்டிருந்தது.

அதனூடாக பல இளைஞர்கள் அவர்களின் வாழ்வியல் இல்லாமல்,
செயற்பட்டிருந்தது.

அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன அது தொடர்பான
விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது, அறிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனாலும்,
சரியான முறையில் அது அடுத்த கட்டத்திற்கு சட்டரீதியான முறையில் மேற்கொள்ளாமல்
கடந்த கால அரசாங்கம் தள்ளிப் போட்டிருந்தது.

NO COMMENTS

Exit mobile version