Home இலங்கை சமூகம் இலங்கையில் தீவிரமாக பரவும் எச்.ஐ.வி தொற்று..! 7 தொற்றாளர்கள் தலைமறைவு

இலங்கையில் தீவிரமாக பரவும் எச்.ஐ.வி தொற்று..! 7 தொற்றாளர்கள் தலைமறைவு

0

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு 7 தொற்றாளர்கள் தலைமறைவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பஸ்கொட விதாத சம்பத் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உதவி அதிகாரி மதுர சஞ்சீவ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“257 எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களில் 15 பேர் வெலிகம பகுதியில் இருந்து பதிவாகியுள்ளனர்.

மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள்

மேலும், 7 தொற்றாளர்கள், தற்போது சுகாதாரத் துறையால் பிடிக்கப்படாமல் தலைமறைவாக இருக்கின்றனர்.

இதேவேளை, எச்.ஐ.வி நோயாளிகளுக்கு வழங்கப்படும் மேற்கத்திய மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக இலங்கையில் வழங்கப்படுகின்றன.

எனவே, அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்காமல் இருக்கவும், உள்நோயாளி சிகிச்சைக்கு பரிந்துரைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version