Home ஏனையவை வாழ்க்கைமுறை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

ஹம்பாந்தோட்டையில் இந்த வருடத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ஒருவரே இதனை குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இந்த அதிகரிப்புக்கான காரணம் குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை.

உரிய சிகிச்சைகள் 

இந்நிலையில், மாவட்டத்தில் இந்த வருடம் 21 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள அவர், மாவட்டத்தில் மொத்தமாக 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களில் பெரும்பாலானோர் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, மனித நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள இந்த வைரஸ் ஒரு இறுதி நோயல்ல என்று தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைகள் மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version