Home இலங்கை அரசியல் கறுப்புப் பணத்தை தூய்மையாக்கும் களத்தில் ஹிஸ்புல்லாவை சிக்கவைத்த தங்க முதலீடு

கறுப்புப் பணத்தை தூய்மையாக்கும் களத்தில் ஹிஸ்புல்லாவை சிக்கவைத்த தங்க முதலீடு

0

தங்கத்தை தயாரிக்கும் நாடுகளில் ஆபிரிக்க நாடுகளின் பட்டியலில் முதலாவது நாடாகவும் உலகளவில் ஐந்தாவது நாடாகவும் கானா விளங்கி வருகிறது.

அதன்படி, கானா நாட்டில் வருடாந்தம் 8 பில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கறுப்புப் பணம் தூய்மையாக்கப்படும் ஒரு இடமாகவும் கானா மாறியுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கானா நாட்டில் முதலீடு செய்யும் போர்வையில் 60 கோடி ரூபாயை இழந்துள்ளதாக கூறப்படும் விடயம் கானா ஊடகங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

எனினும், அப்படியான ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை என ஹிஸ்புல்லாஹ்எம்.பி மறுப்பு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தான் கானா நாட்டிற்கு சென்றதை தனது முகப்புத்தக பதிவுகள் ஊடாக உறுதிப்படுத்தியும் உள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தங்கத்தில் முதலீடு மற்றும் சட்டவிரோதமாக தங்கக் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் பல வரலாறுகள் உண்டு. அதில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமையும் நாம் உதாரணமாக காட்டலாம்.

ஆக, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மேற்கொள்ள தயாரானதாகக் கூறப்படும் இந்த முதலீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது? அவை கறுப்புப் பணமா என்ற விடயங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினம் ஹிஸ்புல்லா மற்றும் அவர் தொட்புடைய இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது இன்றைய ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி……… 

https://www.youtube.com/embed/ibxxu8f5Iyc

NO COMMENTS

Exit mobile version