Home இலங்கை அரசியல் காளி கோயிலை தகர்த்த ஹிஸ்புல்லாவை சமாளிக்க முடியாது தடுமாறும் சாணக்கியன்

காளி கோயிலை தகர்த்த ஹிஸ்புல்லாவை சமாளிக்க முடியாது தடுமாறும் சாணக்கியன்

0

அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பல தீர்மானங்களும் பல விடயங்களும் முன்வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மிகவும் பிரசித்திபெற்ற வாழைச்சேனை காகிதஆலை அமைந்திருக்கும் இடத்தில் பாரிய அளவில் நிலங்கள் காணப்படுவதாகவும் இங்கு மர ஆலைகள் அல்லது அரிசி ஆலைகளை நிறுவுவதற்கான முன்மொழிவொன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா முன்மொழிந்திருந்தார்.

இந்த முன்மொழிவுக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கடந்த காலங்களில் பல விடயங்களை கையாண்ட கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்காமல் ஒதுக்கமாக இருந்துள்ளார் என்று அங்கு கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version