பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இந்திய (India) மாநிலங்கள் சில பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
சீனாவில் (China) கடந்த 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஹுயூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என அழைக்கப்படும் வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் மனித மெட்டாப் நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.
முககவசம் அணிய வேண்டும்
இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டமான இடங்களுக்கு செல்லும் மக்கள் கர்நாடகாவில் முககவசம் அணியுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் HMPV வைரஸ் பரவி வருவதை அடுத்து, தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் புதிய வைரஸ்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இதன்காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.