டாம் ஹாலண்ட் – ஜெண்டயா
2021ல் வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா. இவர்கள் இவருடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங் படத்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹாம் ஆகிய படங்களில் இருவரும் ஜோடிகளாக நடித்தனர். இவர்கள் இருவரும் 2021ல் இருந்தே டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.
என்னை அடிக்க சில குரூப் இருக்கிறது.. நடிகர் சிவகார்த்திகேயன் கூறிய ஷாக்கிங் தகவல்
நிச்சையாதார்தம்
இந்த நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு நடிகை ஜெண்டயா வைர மோதிரத்தை கையில் அணிந்து வந்திருந்தார். இதன்மூலம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை என தெரியவந்துள்ளது.
புத்தாண்டு அன்று இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்களாம். விரைவில் இதுகுறித்து டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.