பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம்.
அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.
இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.
எனவே, வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை போக்கலாம்.
காரணங்கள்
இக்கருவளையம் தோலில் ஏற்படும் அதிகமான ‘பிக்மெண்டேஷன்’ காரணமாக ஏற்படுகிறது.
மேலும்,
இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, கல்சியம் போன்ற சத்துக்கள் குறைந்த உணவும் கருவளையம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாகும்.
புற்றுநோய், டி.பி., நிமோனியா போன்றவைகளால் தாக்கப்பட்டாலும் உடலில் சத்துக் குறைந்து இது ஏற்படுகிறது.
மேலும் அதிக வேலை, தூக்கமின்மை அசதி போன்ற காரணங்களும் இதற்கு பொறுப்பாகின்றன.
கண்களைச் சுற்றயுள்ள தோல் மிகவும் மென்மையானது. எனவே அதிக வெயிலில் வெளியே செல்வது, வெயிலிலேயே நாள் முழுவதும் வேலை செய்வது போன்றவை கண்களை அதிகம் பாதித்து கருவளையம் ஏற்படுகின்றது.
சிறந்த பலன்கள்
எனவே, வெள்ளரிக்காய் சாறு எடுத்து அதில் பஞ்சை தோய்த்து கருவளையங்களின் மேல் வைக்கலாம்.
வெள்ளரிச்சாறும் உருளைக்கிழங்கு சாறும் கலந்து பஞ்சைத் தோய்த்து கண்களில் வைக்கலாம்.
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இவற்றை வட்டவட்டமாக வெட்டி கண்களில் மேல் வைக்கலாம்.
கடலைமாவில் எலுமிச்சைக்காறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
முல்தானி மெட்டியையும் பன்னீரையும் குழைத்துப் பேசி வரவும்.
மேலும் நல்ல, சிறந்த மேக்கப் கருவளையத்தை குறைத்துக் காட்டும்.
கண்களுக்கடியில் கருவளையம் இருந்தால் உருளைக்கிழங்கைத் துருவி மெல்லிய துணிகளில் கட்டி கண்களின் மீது 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.
கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.