Home அமெரிக்கா ஈரானை வீழ்த்தியது அமெரிக்காவிற்கு கௌரவம்.. ட்ரம்ப் பெருமிதம்!

ஈரானை வீழ்த்தியது அமெரிக்காவிற்கு கௌரவம்.. ட்ரம்ப் பெருமிதம்!

0

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்து போரை நிறுத்தியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் 

இது தொடர்பில் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். 

குறித்த பதிவில், “இஸ்ரேலும் ஈரானும் சமமான நிலைப்பாட்டில் போரை நிறுத்த விரும்பின.

அனைத்து அணுசக்தி நிலையங்களையும் திறனையும் அழித்து, பின்னர், போரை நிறுத்துவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கியது.

இதனை தொடர்ந்து, நடந்த தொடர் பதற்றத்திற்கு பின்னர், ட்ரம்ப் நேற்றைய தினம் போர் நிறுத்தம் குறித்து அறிவித்திருந்தார். 

NO COMMENTS

Exit mobile version