விசேட தேவையுடையவர்களை கூட படுகொலை செய்த கொடூரங்களை கொண்ட வரலாற்றையுடைய இலங்கையில் தென்னிலங்கையில் உள்ள 4ஆம் மாடி மிகப்பெரிய திறந்தவெளி படுகொலை களமாக உள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“காலங்காலமாக தமிழ் மக்கள் மீது பல படுகொலைகள் நடைபெற்றுள்ளன.
1983, 1956, 1958, 1977 படுகொலைகளில் பல்வேறு வதை முகாம்கள் வடக்கு கிழக்கில் மலிந்துபோயுள்ளன.
பலாலி தொடக்கம் திருக்கோணமலை கடற்கடை முகாம்களுக்கு கீழ் மிகப்பெரிய வதைமுகாம்கள் இருந்துள்ளன” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…
