Home முக்கியச் செய்திகள் பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை : சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை : சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்

0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் காவல்துறையினரிடம் (Anuradhapura Teaching Hospital) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேக நபர் நேற்றிரவு (12) அனுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கல்னேவ காவல்நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்களையும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரின் வாக்குமூலம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தாம் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பணம் இல்லாததால், பொருட்களைத் திருடும் நோக்கத்துடன் அனுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் விடுதிக்குச் சென்றதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதான குறித்த சந்தேக நபர் கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலை பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version