Home இலங்கை சமூகம் காணாமல்போன நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நல் உள்ளம்

காணாமல்போன நகையை கண்டெடுத்து ஒப்படைத்த நல் உள்ளம்

0

மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன அரைப் பவுண் கை செயினை உரியவரிடம் இன்று சில நபர்கள் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர், மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவிற்கு வந்த நிலையில் கை செயின் காணாமல் போயிருந்தது.

இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மூதூர் பொழுது போக்கு பூங்கா

இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை உடற் பயிற்சியில் ஈடுபட்ட சில நபர்கள் தங்கக் கை செயினை கண்டெடுத்து மூதூர் பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் முன்னிலையில் நகையை கண்டெடுத்த நபர்கள், உரியவரிடம் இன்று ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நகையினை தொலைத்த நபர் கண்டெடுத்து ஒப்படைத்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version