Home ஏனையவை வாழ்க்கைமுறை மாத்திரை போடாமல் இயற்கையாகவே தூக்கம் வர வேண்டுமா ! இதோ தீர்வு

மாத்திரை போடாமல் இயற்கையாகவே தூக்கம் வர வேண்டுமா ! இதோ தீர்வு

0

இரவில் குறைந்தது ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது உடல்நலனுக்கு மிகவும் அவசியம் இந்தநிலையல், இரவில் சிறந்த தூக்கத்தை பெற முக்கியமான எட்டு வழிகளை பற்றி விரிவாக பார்ப்போம். 

1. தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

  1. தினமும் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
  2. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிட மிதமான உடற்பயிற்சியை இலக்காகக் கொள்ளுங்கள்.
  3. ஆனால் தூங்க செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. தூங்குவதற்கு அட்டவணையை உருவாக்கவும்

  1. ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள்.
  2. இது உங்கள் உடலின் உள் கடிகாரத்தை சீராக்க உதவுகிறது.
  3. அதாவது திங்கள் முதல் வார இறுதி நாட்கள் வரை தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்திரிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.
  4. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூங்குவதை தவிர்க்கவும்.

3. மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவும்

  1. மாலை நேரத்தில் போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  2. ஏனெனில் அவை ஆழ்ந்த தூக்கத்தில் தடை ஏற்படுத்தலாம்.
  3. எனவே மாலை அல்லது இரவு நேரங்களில் மது அருந்துவது, உங்களின் தூக்கம் மற்றும் ஹார்மோன் அளவை எதிர்மறையாக பாதிக்கிறது.

4. சாமந்திப் பூ டீ சாப்பிடுங்கள்

  1. சாமந்திப் பூவில் தயாரிக்கப்படும் தேநீரை குடிப்பது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவுகிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

5. மைண்ட்ஃபுல்னஸ் மற்றும் ரிலாக்சேஷன் டெக்னிக்கை பயிற்சி செய்யுங்கள்

  1. ஆழ்ந்த சுவாசம் அல்லது தசை தளர்வு போன்ற டெக்னிக்கை பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  2. தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் டெக்னிக்கை பயிற்சி செய்து மனதை அமைதிப்படுத்தவும்.
  3. இது உங்களை தூக்கத்திற்கு தயார்படுத்தும்.

6. வசதியான தூங்கும் சூழலை உருவாக்கவும்

  1. வசதியான தூக்கத்திற்கு உங்கள் படுக்கையறை குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் மற்றும் இருட்டாகவும் இருக்க வேண்டும்.
  2. அத்தோடு, வசதியான படுக்கை, மெத்தை மற்றும் தலையணையைப் பயன்படுத்துங்கள்.
  3. ஏனெனில் மோசமான படுக்கை ஆனது தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம்.

7. தூங்குவதற்கு முன் சாப்பிடும் விஷயங்களில் கவனம்

  1. அசௌகரியத்தைத் தடுக்கவும் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் தூங்குவதற்கு முன் நீங்கள் சாப்பிடும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
  2. அதாவது அதிகளவிலான உணவுகள், காரமான உணவுகள் அல்லது சிற்றுண்டிகளைத் தவிர்க்க வேண்டும்.

8. தூங்குவதற்கு முன் மொபைல் பார்க்கும் நேரத்தை குறைக்கவும்

  1. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தொலைபேசி மற்றும் மடிக்கணணி போன்ற டிவைஸ்களை பார்ப்பதைக் குறைக்கவும்.
     

NO COMMENTS

Exit mobile version