Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு வாக்களிப்பது..! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வாறு வாக்களிப்பது..! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0

2024 பொதுத் தேர்தல்கள் (General Election) நெருங்கி வரும் நிலையில், வாக்களிப்பது மற்றும் விருப்பமான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழு (Election Commission) வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளதோடு, இது ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும்

வாக்களிக்க, ஆதரிக்கும் கட்சியின் சின்னத்திற்கு அருகில் அல்லது சுயேட்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன்னால் ‘x’ குறியை இடுமாறு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி அல்லது குழுவிலிருந்து மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்யலாம்.

அதன்படி, வாக்காளர்கள் வாக்குச் சீட்டின் முடிவில் ஒவ்வொரு வேட்பாளரின் எண்ணுக்கும் அடுத்ததாக ‘x’ குறியை இடலாம்.

எவரேனும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது குழுக்களுக்கு வாக்களித்தாலோ அல்லது ‘x ‘ குறியைத் தவிர வேறு ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பமான பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மூன்றாம் நாளை எட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version