கொழும்பில் உள்ள சினமன் சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஹோட்டலின் பிரமாண்ட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல இந்திய நடிகர் ஹிருத்திக் ரோஷன்(hrithik roshan) இன்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தார்.
ஒரு நாள் குறுகிய பயணமாக நாட்டிற்கு வந்த ரோஷன், இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்காவில் தரையிறங்கினார்.
கட்டுநாயக்காவில் கடுமையான பாதுகாப்பு
அவருடன் எட்டு துணை நடிகர்கள் கொண்ட குழுவும் வருகை தந்தது. பொலிவுட் நட்சத்திரத்தையும் அவரது பரிவாரங்களையும் வரவேற்க கடுமையான பாதுகாப்பு நடைமுறையில் இருந்தன.
