Home முக்கியச் செய்திகள் யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் பாரிய முதலை – பரபரப்பு சம்பவம்

யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் பாரிய முதலை – பரபரப்பு சம்பவம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு
அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம் (23.11.2024) கச்சேரி – நல்லூர் வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பாக முதலை உயிருடன் இருப்பதை
அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தனர்.

@lankasrinews யாழில் ஊருக்குள் புகுந்த முதலையால் பரபரப்பு! #jaffna #news #latestnews #latestnewsupdates #viralnews #traindingvideo ♬ original sound – LANKASRI TAMIL NEWS

மழையுடனான சீரற்ற காலநிலை 

இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள்
உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள
நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி
மக்கள் தெரிவித்தனர்.

Source: https://ibctamil.com/article/huge-crocodile-sneaks-in-jaffna-town-1732345679?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version