Home முக்கியச் செய்திகள் கிழக்கில் கண்ணிவெடி அகழும் போது வெளிவந்த மனித எச்சங்கள் : நீதிபதியின் உத்தரவு

கிழக்கில் கண்ணிவெடி அகழும் போது வெளிவந்த மனித எச்சங்கள் : நீதிபதியின் உத்தரவு

0

 புதிய இணைப்பு

திருகோணமலை (Trincomalee) – சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

 காவல்துறைக்கு நீதிபதியின் உத்தரவு

அத்துடன் குறித்த பகுதியை நீதிபதியின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் எதிர்வரும் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 அகழ்வுப் பணியின்போது சிதைவடைந்த மனித தலைப்பகுதி மற்றும் கால்களின் எலும்புப்பகுதிகளே கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியை அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுவதோடு, இந்த இடத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தூரத்தில் சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

திருகோணமலை (Trincomalee) – சம்பூர் கடற்கரை ஓரமாக கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தபோது மனித எச்சங்கள் வெளிவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இன்று (20) குறித்த கண்ணிவெடி அகழும்
பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ்
கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கண்ணிவெடி அகழும் பணி

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு
வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய
தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருந்தது.

இந்நிலையிலேயே இன்றையதினம் (20) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள்
கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்ளையை பெறுவதற்காக குறித்த பணி
நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப்
பணி மேற்கொண்ட போதே மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/ejRTXcbpA1Y

NO COMMENTS

Exit mobile version