இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்த வகையில் நீண்டகாலமாக இலங்கை இராணுவத்தின் தண்டனை விலக்கின் சின்னமாகுமாக கருதப்பட்ட செம்மணி சிந்துபதி புதைகுழியின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை இலங்கைமீது திருப்பியுள்ளது.
செம்மணிப் பகுதி, 1990களில் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது.
இந்தநிலையில் செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஊடகமாக லங்காசிறி செம்மணி புதைக்குழியை நோக்கி புறப்பட்டது.
அங்கு எமக்கு கிடைத்த பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தாங்கி வருகிறது கீழ் உள்ள காணொளி…
https://www.youtube.com/embed/wtUQrU8LPAM
